மக்களாட்சியில் மக்கள் மனதில் மகிழ்ச்சி மலர்ந்துள்ளதா?
மகிழ்ச்சி என்பதே உழைக்காமல் வரும் ஊதியத்தின் ஊதியமோ?
மக்களின் மனம் இப்படித் தான் சிந்திக்கிறது!
மக்கள் என்பவர் யாவர்? மக்களாகிய நாம் தானே!
ஆங்கிலேயனை விரட்டி விட்டோம்! ஆதிக்கத்தை விரட்டினோமா?
ஆங்கில மோகம் கொண்டோம்! அந்நிய தேசம் கண்டோம்!
ஆத்மார்த்த அன்பினை இழந்து ஆங்காங்கு அகதிகள் ஆகிப்போனோம்!
அந்நிய தேசத்தில் அகதி என்றால் கூட பரவாயில்லை!
நம்முடை தேசத்திலேயே பலர் நலனிழந்து நிற்கின்றனரே!
சுதந்திரம் பெற்றுவிட்டோம்! குடியுரிமை கையில் கொண்டோம்!
எதனை பெற்றோம் நாம்? எதனைத் தொலைத்தோம் நாம்?
சுதந்திர வாழ்க்கையைப் பெறவில்லை நாம்!
சுயநல வாழ்க்கையைப் பெற்றோம்! பொதுநலப் பார்வையைத் தொலைத்தோம்!
தொலைநோக்குப் பார்வையுமில்லை; அகநோக்குப் பார்வையுமில்லை;
தொலைக்காட்சி நுட்பங்கள் உலகை இணைத்தது உண்மை தான்!
உள்ளங்களை இணைத்ததா அவை!
உலகின் குடைக்கீழ் வாழும் ஓர் உயிர் நாம்!
உணர்வோமா நாம் இதை!
உணர்ந்தே அமைப்போமா புதிய பாதை!
கொடைவள்ளல் பரம்பரை நாம்; கொடுத்துவிட்டோம் அகிம்சைதனை!
விடையென்ன அறியுமுன்னரே வினாவினையே அழித்துவிட்டோம்!
கடையென்ன , முதலென்ன கண்ணியம் காப்பதற்கு…
விடைபெறு சுயநலமே எம் நாட்டை விட்டு நீங்குதற்கு!
தடையேது உந்தனக்கு எம் தாயை விட்டு ஓடுதற்கு!
மடைதிறந்த வெள்ளம் போல் மக்களாட்சி மலரட்டும்!
படைகொண்டு புதுமை பாரதத்தை சமைக்கட்டும்!
மாசற்ற இந்தியா மலரட்டும்!
நீரிலே, நிலத்திலே,காற்றிலே,…
மாசற்ற இந்தியா மலரட்டும்!
மனங்களிலும் புதுப்பொலிவு பிறக்கட்டும்!
வானுயர கேள்விகள் ஆச்சரியமாகட்டும்!
கேண்மையுணர்வே அதில் ஓங்கட்டும்!
Friday, December 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
பதிவிற்கு வாழ்த்துக்கள்
நன்றி ஆரூரன் அவர்களே!
தமிழ் இலக்கணம் பற்றி ஒரு பதிவு இன்று என் வலைப்பூவில்.
தங்களை வரவேற்கிறேன்.
www.kaalavaasal.blogspot.com
இதை கவிதை மாதிரி எடுத்துகிறதா!? இல்லை உரைநடையா!? எப்படியோ கருத்து நல்லாயிருக்கு!
இது வசனக் கவிதை அன்பரே!
Post a Comment