"விடியல் விண்ணில் அல்ல! மனிதா உன்னில்"

Thursday, December 24, 2009

புதிய தமிழ்த்தாய் வாழ்த்து

பாவலரேறு பெருஞ்சித்திரனார்
நன்றி, முனைவர். மு. இளங்கோவன் அவர்களே!
பதிவர் சங்கமத்தில் வாசித்த தமிழ் வணக்கம்!

அன்னை மொழியே அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே ! நற்கணக்கே!

மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே

சிந்தா மணிச்சுடரே! செங்கை செறிவளையே!
தந்த வடமொழிக்கும் தாயாகி நின்றவளே!

சிந்து மணற்பரப்பில் சிற்றில் விளையாடி
முந்தை எகுபதியர் மூத்த சுமேரியத்தார்

செந்திரு நாவில் சிரித்த இளங்கன்னீ !
சிந்துங் கலைவடிவே ! சீர்த்த கடற்கோளில்

நந்தாக் கதிரொளியே! நாடகத்துப் பண்ணியலே !
வந்த குடிமரபோர் வாழ்த்தி வணங்குவமே!9 comments:

தேவன் மாயம் said...

நல்ல வாழ்த்துப்பா!!

முருக.கவி said...

நன்றி தேவன் மாயம் அவர்களே!

க.பாலாசி said...

மிகவும் அருமையான பாடல்.... அப்போதே சொல்லவேண்டுமென நினைத்தேன்.

முருக.கவி said...

நன்றி! க.பாலாசி அவர்களே!

cheena (சீனா) said...

உண்மையில் இது பாட வேண்டுமா - படிக்க வேண்டுமா - அருமை அருமை

பாடல் அருமை - இறைவணக்கம் பாடியதும் அருமை

நல்வாழ்த்துகள் முருக.கவி

முருக.கவி said...

நன்றி சீனா ஐயா, நல்ல தமிழ்ப்பா என்பதால் வாயினிக்க வாசித்தோம்.

ஆரூரன் விசுவநாதன் said...

மிக அருமையான பாடலை வலைப்பதிவர்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்..


தொடரட்டும் தமிழ்ப் பணி

முருக.கவி said...

நன்றி ஆரூரன் அவர்களே!

passerby said...

பாப்பத்தே = ?

என்ன பொருள்? வரிசையாக தமிழ் நூற்களைச்சொல்லியவண்ணம் பார்த்தால், பதிற்றுப்பத்தைத்தான் குறிப்பிடுகிறீர்கள். இல்லையா?

வடமொழிக்குத் தாயானவள், சுமேரியரின் நாவில் நின்று இளங்கன்னியாகச் சிரிக்கின்றாள்!

தென்னன் மகள்
வடமொழிக்குத்தாய்
சுமேரியரின் நாவில் இளங்கன்னி

என்ற தாய்க்குப்பின் கன்னி என்ற இடரும் வரிசையை

தென்னன் மகள்
சுமேரியரின் நாவில் இளங்கன்னி
வடமொழிக்குத் தாய்

என இடும்போது, சரியாக இருக்குமல்லவா? ஈரடிகளின் இடமாற்றத்தால் இது சாத்தியமாகும்.கவிதை நன்றாக இருக்கிறது.

Post a Comment