"விடியல் விண்ணில் அல்ல! மனிதா உன்னில்"

Wednesday, January 13, 2010

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

உள்ளம் பொங்கும் மகிழ்வுடன் – உம்
இல்லம் சிறக்க வாழ்த்துகள்!
கள்ளம் போக கனிவுடன் – நாம்
கடமை யாற்ற வாழ்த்துகள்!
துள்ளும் மனதின் இளமையை – என்றும்
தூய்மை யாக்க வாழ்த்துகள்!
வெல்வோம் மனித நேயத்தை – நமை
வேதம் போற்ற வாழ்த்துகள்!

தருணம் பார்த்து விதை விதைத்து – அதை
தரமான பயிராய் வளர்த்து,
விரும்பும் உணவை நமக்களிப்பார் – உழவர்
விரும்பும் வாழ்வை நாமளிப்போம்!
அரும்பிடும் நட்பினை அறிகின்றோம் – ஆத்ம
அன்பினை மாரியாய் பொழிகின்றோம்!
கரும்பினும் இனிய அன்பர்களுக்கு – எம்
கனிந்த பொங்கல் வாழ்த்துகள்!!

8 comments:

துபாய் ராஜா said...

தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் said...

கவிதை அருமை.... தங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அன்பின் முருக.கவி

அருமையான தமிழ் வாழ்த்து - பொங்கல் வாழ்த்து - உழவரை நினைவு கூறும் வாழ்த்து - ஆக்கத்திற்கு பாராட்டுகள்

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் முருக.கவி

முருக.கவி said...

நன்றி துபாய் ராஜா அவர்களே!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

முருக.கவி said...

திரு. சி. கருணாகரசு அவர்களுக்கு,
பாராட்டுக்கு மிக்க நன்றி!
தங்களது வலைப்பதிவுகள் ஒவ்வொன்றும்
வித்தியாசமானவை, மிக அருமை!!

முருக.கவி said...

அன்பு சீனா ஐயா அவர்களுக்கு!
பாராட்டுதலுக்கு மிக்க நன்றி,
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

ஆரூரன் விசுவநாதன் said...

கவிதை வரிகள் அழகு....வாழ்த்துக்கள்

முருக.கவி said...

திரு. ஆரூரன் விஸ்வநாதன் அவர்களுக்கு,
வாழ்த்துக்கு நன்றி!

Post a Comment