"விடியல் விண்ணில் அல்ல! மனிதா உன்னில்"

Tuesday, September 1, 2009

இறைவணக்கம்!

சத்யம் சத்யம் இறைநிலையே!
சாத்யம் இருக்கு அனுக்கிரஹியே!
உன்னால் முடியும் முடியுமென்றே
உன்திருப் பாதம் சரணடைந்தேன்!

என்றும் எங்கும் திருவருளே!
நின்று பொழியும் கார்முகிலே!
இன்றும் என்றும் உனதருளே
வேண்டி நிற்கிறோம் உண்மையிலே!

நன்மை பலவும் பெருகிடவே
நாடியே அருளும் நல்லதுவே!
இம்மையும் மறுமையும் சிறந்திடவே
இனிதே அருள்வாய் கண்மணியே!

மெய்மை மென்மை மேன்மையென
உய்யும் பொருளில் உறைவதுவே!
மேன்மை மேன்மை மேன்மையதை
மேலும் மேலும் தருவதுவே!

கல்விப் பயிலும் கண்மணிகள்
கருத்துடன் பயில அருள்புரிவாய்!
செல்வம் யாவும் சேர்ந்துநிதம்
சிறப்பாய் வாழச் செய்திடுவாய்!

ஆற்றல் மிக்க வீரனென
அடியேனையும் நீ ஆக்கிடுவாய்!
தோற்றப் பொலிவுடன் என்னையும்நீ
துலங்கிட செய்தே துணைபுரிவாய்!

அன்பும் அருளும் ஒருங்கிணைந்தே
அடியேன் கைவர அருள்செய்வாய்!
பணிவும் துணிவும் சேர்ந்தினிதே

அணிசெய்திட நீ மனம்மகிழ்வாய்!

4 comments:

துபாய் ராஜா said...

இனிமையான இறைவணக்கம் மிக நன்று.

அனைத்து வரிகளும் அருமை.

//அன்பும் அருளும் ஒருங்கிணைந்தே
அடியேன் கைவர அருள்செய்வாய்!
பணிவும் துணிவும் சேர்ந்தினிதே
அணிசெய்திட நீ மனமகிழ்வாய்!//

அனைத்து வரிகளிலும் அருமை.

வாழ்த்துக்கள்.

ஆரூரன் விசுவநாதன் said...

இறை வணக்கம் இனிமை. இறையிடம் வேண்டல் என்பது சரியான பதமாக இருக்குமோ?
வணங்குவதே வேண்டுதற்காக என்றாகிவிட்டது, போலும்.
வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

ஆரூரன் விசுவநாதன் said...

விடியல் என்னில் அல்ல மனிதா...உன்னில்
அருமை

முருக.கவி said...

நன்றி!

Post a Comment