"விடியல் விண்ணில் அல்ல! மனிதா உன்னில்"

Wednesday, September 9, 2009

தமிழுணர்வு!


தமிழப் பேச முடியல
தமிழப் பேச முடியல
தமிழ்நாட்டுல பிறந்திருந்தும்
தமிழ்மொழிய படிச்சிருந்தும்
தமிழப் பேச முடியல.
பன்மொழிய படிச்சவருதான் பாரதியாரு
பாரினிலே தமிழப் பத்தி என்ன சொன்னாரு
யாமறிந்த மொழிகளிலே இனிமையினாரு
தேமதுர தமிழோசை பரப்பனுன்னாரு
தமிழ்நாட்டுல பன்துறையில தமிழும் இருக்குது
தமிழிருக்க பிறமொழிதான் ஆட்சி செய்யுது
தமிழருன்னா தமிழை முதலில் கத்துக்கவேணும்
தமிழ் படிச்சு பன்மொழியும் தெரிஞ்சுக்கவேணும்
உலகமெங்கும் தமிழறிவை வளர்த்திடவேணும்
உள்ளபடி தமிழுணர்வே ஆட்சி செய்யோணும்!

4 comments:

Jeyapalan said...

ஆதங்கம் புரிகிறது.

"தமிழ்" நாடெனும் மாயை பற்றி இங்கே எழுதியிர்ப்பதையும் பாருங்கள்

http://jeyapal.blogspot.com/2009/07/blog-post.html

ஆரூரன் விசுவநாதன் said...

தமிழ்நாட்டுல பன்துறையில தமிழும் இருக்குது
தமிழிருக்க பிறமொழிதான் ஆட்சி செய்யுது

உண்மைதான்.

வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்

முருக.கவி said...

நன்றிங்கண்ணா!

Visu Pakkam said...

நானும் இந்த “தமிழ் அழிகிறது, தமிழ் மெல்லச் சாகிறது” என்பதெல்லாம் வெறும் கூச்சல், அரண்டவன் கண்ணில் பட்ட இருள் என்றே பல காலமாக நினைத்து வந்தேன். ஆனால் சமீபத்தில் சென்னை சென்றபோது உண்மை நிலை புரிந்தது. தாய் மொழியை இந்த அளவுக்கு வேறு எவரேனும் உதாசீனப்படுத்துவார்களா என்பது சந்தேகமே. தமிழ்த் தொலைக்காட்சிகளோ கேட்கவே வேண்டாம். வெறும் சமையல் நிகழ்ச்சிகளில் கூட ஆங்கிலத் திணிப்பு எல்லை மீறித்தான் போய்க்கொண்டிருக்கிறது. ”Water Add” பண்ணுங்க, 5 மினிட்ஸ் “சாடே (sauté)” பண்ணுங்க, கறிகாய் “uniformஆ cut” பண்ணுங்க என்றெல்லாம் “தூய” தமிழில் பேசுவதுதான் பெரிய கௌரவம் போலவும் தமிழ் பேசுவதே ஏதோ பெரிய அநாகரிகம் போலவும்தான் இந்த நிகழ்சிகள் போய்க்கொண்டிருக்கின்றன.
இவற்றையெல்லம் பார்க்கும்போது உங்கள் மனக்குமுறல் நியாயமானதே.
ஹிந்தி திணிப்பை எதிர்ப்பதில் முன்னணியில் இருந்த தமிழ்நாடு, இப்படி ஆங்கிலத்தைத் தன் மீது தானே திணித்துக்கொண்டிருப்பது விந்தையிலும் விந்தை.
அன்புடன்
கி. விசுவநாதன்

Post a Comment