"விடியல் விண்ணில் அல்ல! மனிதா உன்னில்"

Friday, September 4, 2009

தம்பிப் பாட்டு


சின்ன சின்ன தம்பிகளே
கொஞ்சம் நில்லுங்க! இந்த
அன்னை சொல்லும் சொல்லைக்
கொஞ்சம் காதில் வாங்குங்க!

எண்ணம் தன்னை உயர்வாய்
வைக்க வேணுங்க! அட
எண்ணம் போல வாழ்வென்பதை
நினைவில் கொள்ளுங்க!

உடலைத் தந்து உயிராய்
நம்மை வளர்த்தது யாருங்க?
உயர்வையே நாடும் உத்தமர்
நம் பெற்றோர் தானுங்க!

கல்விக் கண்ணைத் திறந்து
வைத்த கடவுள் யாருங்க?
கடமையே தம் பெரிதாய்
கொண்ட ஆசான் தானுங்க!

மாதா பிதா குரு தெய்வம்
மனதில் கொள்ளுங்க! நீங்க
மாறாத அன்போடு எல்லோரையும்
மரியாதை செய்யுங்க!

சத்துள்ள உணவினை மட்டும்
எப்போதும் உண்ணுங்க!
அளவாய் உண்டு வளமாய் வாழக்
கற்றுக் கொள்ளுங்க!

உணவு தந்த எல்லோருக்கும்
நன்றி சொல்லுங்க! நித்தம்
உணவு எல்லோருக்கும் கிடைக்க
வேண்டுமென்று எண்ணிக் கொள்ளுங்க!


ஒழுக்கம் தன்னை உயிராக
மதிக்க வேணுங்க! நீங்க
உடலாலும் மனதாலும் என்றும்
உண்மையாய் இருங்க!

சொன்ன சொல்லை சொன்ன
வண்ணம் காக்க வேணுங்க!
ஒரு சொல்லு, ஒரு வாக்காய்
இருக்கப் பழகுங்க!

நல்லது மட்டும் எப்பொழுதும்
பழகிக் கொள்ளுங்க! நீங்க
நல்லது அல்லாததை அப்படியே
விட்டு விடுங்க!

கல்விக் கூடம் என்பதொரு
கலைக் கூடங்க! அதில்
உங்களை நீங்களே உருவாகிக்க
கற்றுக் கொள்ளுங்க!

கடின உழைப்பும் விடாமுயற்சியும்
கண்களைப் போலங்க! அதனை
கைக் கொண்டு எல்லோரும்
முன்னுக்கு வாருங்க!

சொன்ன கருத்து அத்தனையும்
உளியைப் போலங்க! அந்த
உளியை எடுத்து உங்களை
நீங்களே செதுக்கிக் கொள்ளுங்க!



3 comments:

mohanasundaram said...

சொன்ன கருத்து அத்தனையும்
உளியைப் போலங்க! அந்த
உளியை எடுத்து உங்களை
நீங்களே செதுக்கிக் கொள்ளுங்க

----அருமையான வரிகள்.வாழ்த்துக்கள்.

முருக.கவி said...

நன்றி திரு.மோகனசுந்தரம்.

தமிழ் said...

அருமை

Post a Comment