"விடியல் விண்ணில் அல்ல! மனிதா உன்னில்"

Saturday, September 5, 2009

“ஆசிரியர் தின வாழ்த்து”

ஆயிரம் ஆயிரம் மழலையர்க்கு அன்பினை வழங்கும் அட்சயப் பாத்திரங்கள்!
அறியாமை இருள் போக்கி அறிவின் சுடரேற்றும் அணையா தீபங்கள்!
ஓயாமல் உழைத்துழைத்து உன்னத சமுதாயம் தரும் உயர்ந்த உள்ளங்கள்!
மெழுகெனவே தானுருகி பிறர்க்கு ஒளி தரும் தியாக தீபங்கள்!
அறிவு பசி தீர அறிவினைக் கேட்டவருக்கு கேட்டவண்ணம் தரும் கற்பக விருக்ஷங்கள்!
மழலையர் என்ற நிலையினின்றும் மாணவர் என்ற நிலைக்கு உயர்த்தும் ஏணிப் படிகள்!
மாணவரின் ஆக்க நிலை உயர்த்த வாய்த்த முன்மாதிரிகள்!

சக்தியுள்ள சமுதாயம் படைப்பதனால் இவர்கள் பிரம்ம சக்தி!
நற்குணங்களை என்றும் காப்பதனால் இவர்கள் விஷ்ணு சக்தி!
தீய சக்திகளை அழிக்கும் மாணவம் படைப்பதனால் இவர்கள் சிவசக்தி!
அனைத்துமாகி விளங்கும் எங்கள் ஆசான்களே பரம்பொருளின் சக்தி!
அன்பின் வழி வந்து அறிவின் சுடர் தந்து அறம் பல தழைக்கச் செய்யும்
ஆசான்கள் தாள் போற்றுவோம்! அடிமலர் பணிந்தேத்துவோம்!
அறிவின் ஒளியேற்றுவோம்! நாமே!!

1 comment:

Anonymous said...

miga nandru.....unathamana...varthaigalin thaal en siramerkiren.....

Post a Comment