ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் ‘புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவிற்கு நமது முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் ஐயா அவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்.
இடம் : வ.உ. சி. பூங்கா மைதானம், ஈரோடு.
நாள் : 11/08/2009
நேரம் : மாலை 6.00 மணி.
அன்புள்ள கலாம் ஐயாவிற்கு !
பணிவான வணக்கங்கள்.
ஐயா ! நீவீர் -
அன்பினில் அமுதம் ! அறிவினில் இமயம் ! அடக்கத்தில் பேரண்டமே !
பண்பினிலும் பரிவினிலும் பார் புகழும் பசிபிக் பெருங்கடலே !
அறிவியல் பார்வையில் ஆற்றல் மிக்க சூரியன் நீர் !
நடுத்தரக் குடும்பத்தில் பிறப்பு ! நாடாளும் ஜனாதிபதியாக உயர்வு !
எப்படி முடிந்தது உம்மால் ! இடையறாத உழைப்பு !
எதிலும் சோர்ந்து விடாத துடிப்பு ! எடுத்ததை முடிக்கவேண்டும் என்ற முனைப்பு !
இதனைப் பெறச் சாதகமானவை சூழ்நிலைகளா ?
இல்லை, கிடைத்த சூழ்நிலைகளை நீர் சாதகமாக்கிக் கொண்டீர் !
ஒவ்வொரு இந்தியனுக்கும் முன் உதாரணம் நீர் ! - உம்மையே
முன்னோடியாய்க் கொண்டு முன்னேறும் சமுதாயத்தின்
முனைப்பில் நானும் ஒரு சிறு துரும்பு !
கண்ணுக்கு நேரே நாங்கள் காணும்
கருணையின் உருவம் ! கடமையின் வடிவம் நீர் !
உம்மைக் கண்டால் இந்தியச் சட்டம் எழுந்து வந்தது போல் உள்ளதே !
எல்லா மாணவர்களும் அறிவில் விழிப்பு பெற நீர்
எடுக்கும் முயற்சிகள் கைகொடுக்கும் !
இந்தியா வல்லரசெனப் பெயரெடுக்கும் !
அதிகாரத்தில் ஆடும் நாடுகளை ஒடுக்கும் !
ஆற்றல் மிக்க வல்லமையை அன்பின் வழி கொடுக்கும் !
அண்டமெங்கும் அமைதி நிலைக்கும் !
ஆனந்தம் எல்லா உயிர்களும் துய்க்கும் !
பாசமுள்ள தமிழ்ச் சான்றோரே ! நேசக்கரம் நீட்டும் நல்லவரே !
உம்மை நம்மூருக்கு வருக ! வருக ! என வரவேற்று மகிழ்கிறோம் !
நம் மக்கள் உய்ய நற்கருத்துகளை தருக ! தருக ! என அழைக்கிறோம் !
உம் கருத்துகளை செவிமடுக்க விழைகிறோம் !
1 comment:
தமிழாசிரியை கவிதாராணி அவர்களே,
ஹூஸ்டனில் விண்வெளி நிலையத்தில் இருந்து மடல் அனுப்புகிறேன். கல்வெட்டு ‘ராசு’ (ஈரோடு) என் இனிய நண்பர். திரு. ஸ்டாலினைப் பார்த்தால் நான் விசாரித்ததாய்ச் சொல்லவும்.
நிகழ்ச்சி முடிந்தபின் மேதகு. கலாம், அறிஞர் ம. அண்ணாதுரை, சொற்பொழிவுகளைத் தொகுத்து எழுத வேணுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.
நா. கணேசன்
Post a Comment