"விடியல் விண்ணில் அல்ல! மனிதா உன்னில்"

Sunday, August 2, 2009

வானியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு…….


வானவியல் ஆராய்ச்சியினால் வானளாவ புகழ் சேர்த்தவர் நீர்!
பெயருக்கேற்ற வகையில் தமிழ்ப் பேருரை வழங்கியவர் நீர்!
நயம்பட நல்ல தமிழிலே செவிக்குணவு வழங்கியவர் நீர்!
நன்றி நவிலல் நாவளவில் நில்லாமல் நாபியில் இருந்து நவின்றவர் நீர்!
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்’ என்ற பாரதியின்
பாடல் வரிகளைத் தன் தாரக மந்திரமாய் கொண்டவர் நீர்!
முன்னேற்றப் பாதையில் முழுதும் முயன்று - பாரதத்தை
முன்னுக்குக் கொண்டு வந்தவர் நீர்!
சந்திராயன் எனும் விண்கலத்தை விண்ணில் ஏவி அதன்
சுழல் வட்டப் பாதையில் சுழல விட்டு வெற்றி வாகை சூடியவர் நீர்!
அண்ணா பல்கலைக்கழகத்தினால் முனைவர் பட்டம் பெற்றவர் நீர்!
அண்ணா! நீவீர் இன்னும் பல சாதனைகள் படைக்க
திண்ணமாக வாழ்த்துகிறோம்! உம்
எண்ணம் போல் மேன்மையடைய
இன்னும் இன்னும் இன்னும் பல
விருதுகளும், பட்டங்களும், வாழ்த்துக்களும் பெற்று
கன்னல் மொழியினைப் போல்
கன்னித் தமிழினைப் போல் வானந்தன்னில் உள்ள பல கோடி
நட்சத்திரங்கள் போல்
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்!!

3 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கவிதை

வானியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

முருக.கவி said...

விமர்சனத்திற்கு மிகவும் நன்றி.

mohanasundaram said...

மாபெரும் அறிவியல் அறிஞரே.
வாழ்க பல்லாண்டு.
அடுத்த பயணம் தொடரட்டும்.
வாழ்க.. வாழ்க...

Post a Comment