இன்னிசையால் இமயமென உயர்ந்து நிற்கும் இளைஞனே!
பனிமலையே! பணிவுள்ள மலையே!
உனக்கென் உள்ளார்ந்த வாழ்த்துகள்!!
பனித்துளியாய், குளிர்நிலவாய் யான்தரும் வாழ்த்துகள் யாவும்
பனிமலையே உன்னை என்செய்யும்!
இன்னுமோர் அணியெனவே உனக்கு அணி செய்யும்!!
வெளியுலகில் உள்ளதிலே நாட்டங்கொண்டு
தன்னை உணராமல் முழுமையடையாமல்
முடிந்துபோகும் மானிடர்கள் பலர்!!
தன்னையறிந்து நூறு சதவீதம் கவனமொடு செயலாற்றும்
உன்னைப் போல் ஆர்வலர்கள் ஊர் முழுதும் பெருகவேண்டும்!
ஏன்? இந்த உலகம் முழுதும் பெருக வேண்டும்!!
உடலில் ஓடும் குருதியின் இசையறிந்தவன் நீ!
உள் இயங்கும் உயிரோட்டம் உணர்ந்தவன் நீ!
செயலாற்றும் வகையறிந்து செய்து முடிக்கும் திறம்பெற்றவன் நீ!!
சிந்தையிலே கள்ளமற்ற உண்மை உரம் பெற்றவன் நீ!
நாடி நரம்புகளில் ஓடும் காற்று, வெப்பம், குருதி, உயிர்
இவற்றின் நாட்டியம் அறிந்தவன் நீ!
அவற்றை ஜதிகளாய், ஸ்ருதிகளாய் ஸ்வரம் பிடிப்பவன் நீ!!
உயிருள்ள இசையினை உருவாக்கும் வித்தகன் நீ!
உன்னிசையே மனநோய் போக்கும் மாமருந்து!
இன்னிசைக் கலைஞனே! நீயொரு இனிய மருத்துவனே!!
இசை கேட்பதால் மனதின் இறுக்கம் தளர்கிறது, மனமோ மலர்கிறது!
அமுதமென தந்துவிட்ட இசையினால் உயிர் இறவா நிலை எய்துமே!
உனக்கு உயிரோடு இருக்கும் போதே புகழுடம்பும் கிடைத்துவிட்டதே!!
நீ வழங்கும் இசையினால் நிமிர்ந்து நின்றது மனித இனம்!
நின்னால் தலை நிமிர்ந்தவைகளுள்
நம் நாடும் மொழியும் அடங்குமே!!
இந்தியனே! தன்னலமில்லாத் தமிழனே! இன்னிசைப்புயலே!
நினக்கு டாக்டர் பட்டம் இனிதாய் பொருந்துகிறதே!
அண்ணா பல்கலைக்கழகம்தான் அழியாநிலையெய்தியது
உனக்குப் பட்டம் தந்ததினால்!!
புயலே! உனக்குப் பூட்டிய பட்டத்தினால்
பல்கலைக்கழகமும் புகழிடம் பெற்றிட்டதே!
இந்தியாவின் மகத்துவத்தை உணர்த்த வந்த நீ
இன்னுமோர் மகாத்மாவே!!!

6 comments:
nice nice
very superb
Wish you all the best Dr. Rahman, we expecting more songs in Indian languages
-Mastan
அருமையான கவிதை
A R ரஹ்மானுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
thanks for visiting my blog. happy friend ship day.
நல்ல பதிவுகள். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். குழந்தைகளுக்கான கவிதைகள், சமூக நீதி படக் கதைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. முயற்சி செய்யுங்கள்
அன்புடன்
ஆரூர்
மெல்லிசை மன்னரைப்பற்றியும் ஒரு கவிதை எழுதக்கூடாதா?
விசுவநாதன் அவன் பெயர்
எனினும் அவன் எடுத்ததில்லை
விஸ்வரூபம் ஒருபோதும்...
மெல்லிசையில் மட்டுமல்ல மன்னன்
மேன்மைமிகு குணமதிலும் மன்னன்...
தமிழைப்பாடிப்பாடி தன் தாய்மொழியையே
மறந்து போனானோ தெரியாது.
இருக்கும்போதே மறந்து போகும்
இவ்வுலகில்
தன் மறைந்த நண்பனை
நினைந்து வாழும் மாமனிதன்
அவனிடம் கோடிப்பணம்
கொட்டிக்கிடக்கிறதா? தெரியாது...
அவனை கோடிமனங்கள்
சுற்றிப்பிணைந்த கதை நாடறியும்..
வாழ்க எம்.எஸ்.வி. வாழ்க வைகயம்.
Post a Comment